படப்பிடிப்புத் தளங்கள்ல பெண்களோட எண்ணிக்கை அதிகமா இருந்தா மட்டும்தான் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும்
தென்னிந்திய சினிமாவில் எதற்கும் அஞ்சாமல் தன் கருத்துக்களைப் பேசக்கூடியவர் பார்வதி.
இப்போ அவர் கொடுத்திருக்கிற இந்த பேட்டி சினிமா வட்டாரத்துல பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கு.
தனுஷ் – பார்வதி நடிப்புல வெளியான ‘மரியான்’ படத்துல ஒரு சீனுக்காக பார்வதி முழுசா தண்ணியில நனைய வேண்டியிருந்ததாம். நனைஞ்சதுக்கு அப்புறம் டிரஸ் மாத்தணும், ஹோட்டல் ரூமுக்கு போகணும்னு கேட்டிருக்கார். ஆனா அங்க இருந்தவங்க யாரும் அதை ஒரு பொருட்டா கூட மதிக்கலையாம்.
“எனக்கு பீரியட்ஸ் (Period), நான் கண்டிப்பா போகணும்”னு கத்திச் சொல்லியும் யாருமே அவருக்கு சப்போர்ட் பண்ணலையாம். அந்தப் பெரிய படப்பிடிப்புத் தளத்துல பார்வதியையும் சேர்த்து மொத்தமே மூணு பெண்கள் தான் இருந்திருக்காங்க. இதனால தன்னோட உடல்நிலை கஷ்டங்களைச் சொல்லி உதவி கேட்கவே ரொம்ப அவதிப்பட்டதா பார்வதி வேதனையோடு சொல்லிருக்கார்.
தனுஷ் – நயன்தாரா மோதல்ல பார்வதி நயன்தாராவுக்கு சப்போர்ட் பண்ணது எல்லாருக்கும் தெரியும். அதுக்கு அவர் ஒரு முக்கியமான காரணம் சொல்லிருக்கார்:
“நயன்தாரா மாதிரி ஒரு பெரிய இடத்துல இருக்குறவங்க, சரியான ஆதாரம் இல்லாம யாரையும் இப்படி குற்றம் சாட்ட மாட்டாங்க. அதனாலதான் நான் அவருக்கு சப்போர்ட் பண்ணேன்.”
படப்பிடிப்புத் தளங்கள்ல (Shooting Spot) பெண்களோட எண்ணிக்கை அதிகமா இருந்தா மட்டும்தான் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும்னு பார்வதி இந்த நேர்காணல்ல ரொம்ப அழுத்தமா சொல்லிருக்கார்.


