தைப்பூசம் திருவிழா நிகழ்வின் மூன்றாம் நாளில் முருகன் ஆலயத்தில் சாமியார் மீது மிளகாய் கரைசல் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீமத் தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று சாமியார் மீது மிளகாய் கரைசல் அபிஷேகம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த தைப்பூசம் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று மிளகாய் அரைத்து அந்த கரைசலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சாமியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.மேலும் அந்த மிளகாய் கரைசலை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளித்தால் வீட்டில் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் என்பதால் போட்டி போட்டு கொண்டு பக்தர்கள் எடுத்து சென்றனர்.
சாமியார் மீது ஊற்றிய மிளகாய் கரைசலை வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால் நன்மை உண்டாகும் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து சென்ற பக்தர்கள்.
தமிழகத்தில் தைப்பூசம் திருவிழா கொண்டாட்டமாக முருகன் திருத்தலங்களில் கடந்த 3 நாட்களாக முருக பக்தர்கள் தீ மிதித்தல், அலகு குத்துதல்,காவடி எடுத்தல்,சூடனா எண்ணையில் கையால் வடை சுடுதல் மற்றும் மிளகாய் கரைசல் அபிஷேகம் என தங்கள் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


