கர்நாடகா மாநிலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு ஓம் சக்தி பக்தர் சைக்கிளில் தேசிய கொடியை கட்டி யாத்திரை பயணம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மேல்மருவத்தூருக்கு சென்ற ஓம் சக்தி பக்தர்
கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த சித்துராஜ்(35) என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 04.01.2025 அன்று பெங்களூரில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சைக்கிள் மூலம் யாத்திரை தொடங்கினார்.
தேசிய கொடியை சைக்கிளில் கட்டிக்கொண்டு முதல் நாள் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வரை பயணம் செய்து திருவண்ணாமலை அருணாச்சலர கோவிலில்ச சாமி தரிசனம் செய்துவிட்டு.


மூன்றாவது நாளான இன்று திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூருக்கு பயணம் மேற்கொண்டார் அவர் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மேல்மலையிலிருந்து புறப்பட்டு இன்று மாலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
குறிப்பாக இவர் கடந்த வருடம் பெங்களூரில் இருந்து சபரிமலைக்கு சைக்கிளின் மூலம் யாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஒரு மறை சைக்கிளிங் யாத்திரை செய்வது அவர் உடல் ஆரோக்கியத்திற்கும் மன நிம்மதியும் தருகிறது என்று கூறி மேல்மலையனூரில் இருந்து புறப்பட்டு பயணத்தை தொடங்கினார்.


