79வது சுதந்திர தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை
2030 ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் அனல் மின் திறன் 10.1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் மற்றும் 100 மில்லியன் டன்களுக்கு மேல் சுரங்கத் திறன் ஆகியவை எட்டுவதற்கு நிறுவனம் இலக்கு- என்.எல்.சி சேர்மன்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பாரதி விளையாட்டு அரங்கத்தில் 79வது சுதந்திர தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசிய கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவர்கள் தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் தீயணைப்பு படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு என் எல் சி சேர்மன் பேசுகையில்
என் எல் சி இந்தியா நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டமான 2030ம் ஆண்டில் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர் இந்த திட்டத்தின்படி அனல் மின் மற்றும் சுரங்க திறனை இரண்டு மடங்காகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை பல மடங்காகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் ஆனால் மின் திறன் 10.1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் மற்றும் 100 மில்லியன் டன்களுக்கு மேல் சுரங்கத் திறன் ஆகியவை எட்டுவதற்கு நிறுவனம் இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது
நம்முடைய நிதி செயல் திறன் நமது செயல்பாட்டு பிரதிபலிக்கும் வகையில் உள்ளது கடந்த 2024 – 25 ஆம் நிதி ஆண்டில் நம்முடைய ஒருங்கிணைந்த வருவாய் 16,889 கோடியை எட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டு விட 18 சதவீதம் அதிகமாகும் வரிக்குப் பிந்தைய லாபம் 2,714 கோடியாக உள்ளது இது 45 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது மேலும் பல்வேறு திட்டங்களுக்கான மூலதன செலவினங்களுக்காக 7,736 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நமது புதுப்பித்தக்க எரிசக்தி துறைக்கான துணை நிறுவனத்தில் முன் அனுமதியின்றி 7,000 கோடி வரை முதலீடு செய்வதற்கு மத்திய அரசு நமக்கு மேம்படுத்தப்பட்ட முதலீட்டு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி உள்ளது இது நாம் விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுவதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது அரசின் உயர் மட்டத்திலிருந்து கிடைத்த இந்த நம்பிக்கை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வலுவான வணிக நிலையை உறுதிப்படுத்துகிறது என பேசினார்.


