in

பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை நிகும்பலா யாகம்

பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை நிகும்பலா யாகம்

 

ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு கொள்ளிடம் பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நடத்தப்பட்ட நிகும்பலா யாகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல வல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடைபெற்றது. நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் அளித்த 100 கிலோ மிளகாயை யாகத்தில் இட்டு வேத விற்பனர்கள் மந்திரம் ஓத நிகும்பலா யாகம் நடைபெற்றது.

இதனை அடுத்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு ஆலயத்தை சுற்றி வளம் வந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பிரத்தியங்கரா தேவிக்கு ஆவணி மாத அமாவாசை நிகும்பலாயாகம்

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி