நெய்வேலி ரோமாபுரி அந்தோனியார் ஆலய கொடியேற்று விழா
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரி அந்தோனியார் ஆலய கொடியேற்று விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே ரோமாபுரி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.
கூனாங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அருந்தந்தையர்கள் சாமிநாதன், செல்வநாயகம் சூசைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆலயத்தில் இருந்து புனித அந்தோனியார் உருவம் பதித்த கொடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் அந்தோனியார் பாடல்கள் மற்றும் ஜெபங்களை ஜெபித்தவாறு கொடியேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து வருகின்ற 17.06.25 ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


