நெய்வேலி என்எல்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 12 இல் உள்ள என்எல்சி நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வட்டம் 19ல் உள்ள தமிழர் பண்பாடு கழக கலையரங்கில் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர் ரமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக என்எல்சி பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டுதுறை பொதுமேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு வட்டம்-12 என்எல்சி நடுநிலைப்பள்ளியில் படித்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கோவிந்தம்மாள் ஆகியோரை அழைத்து வந்து மாணவர்கள் கௌரவப்படுத்தினர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தங்களது சந்திப்பை நினைவு குழு வகையில் குழு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


