கிருஷ்ணாபுரத்தில் 70 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 70 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கிருஷ்ணாபுரத்தில் பேருந்து நிலையம் பல்கலைக்கழகம் அமைந்தால் மிகவும் மகிழ்ச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர் பொதுமக்கள்.
கும்பகோணம் அருகே வட இந்தியாவில் கும்பமேளா எப்படி நடக்கிறது அதுபோல தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா நடக்கும். இந்த விழாவில் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழகத்தில் இருந்து சரியாக திட்டங்கள் வகுத்து அறிக்கையாக கொடுத்தால் செய்து தருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் போக்குவரத்து நேரத்திலே கட்டுப்படுத்த கிருஷ்ணாபுரம் அருகே 15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதாக இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணாபுரம் பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பல்கலைக்கழகம் அமைந்தால் பல்வேறு தரப்பினர் பயனடைவார்கள்.
இதற்கு பெரு முயற்சி செய்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் புதிய பேருந்து நிலையம் பணியை தொடங்கி விரைவில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறோம் என்று தெரிவித்தனர்.


