2ஜி ஊழல் குற்றச்சாட்டு மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்த நீரா ராடியா ஏழுமலையானை வழிபட்டார்
2ஜி ஊழல் குற்றச்சாட்டு மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்த நீரா ராடியா ஏழுமலையானை வழிபட்டார்.
2ஜி ஊழல் குற்றச்சாட்டு மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்த நீராராடியா இன்று அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் கலந்துகொண்டு சாமி கும்பிட்டார்.
பின்னர் அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிறப்பான முறையில் ஏழுமலையானை வழிபட்டேன் என்று கோவில் எதிரில் செய்தியாளர்களிடம் நீரா ராடியா கூறினார்.