in

மூன்றாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடும் நயன் விக்னேஷ்

மூன்றாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடும் நயன் விக்னேஷ்

 

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் இயக்குநராக இருந்த நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்தனர்.

அவர்கள் ஒன்றாக வேலை செய்யும் போது காதலித்து பின்னர் 2021 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஜோடி ஜூன் 2022 இல் திருமணம் செய்து கொண்டு, செப்டம்பர் 2022 இல் வாடகைத் தாய் மூலம் இரட்டை மகன்களை பெற்றனர்.

ஜூன் 9…ஆனா இன்று தனது மூன்றாவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடும் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் ரொமாண்டிக் புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு. “மற்றவரை யார் அதிகமாக நேசிக்கிறார்கள் என்று நீங்கள் அடிக்கடி யோசிக்கலாம், அதற்கான பதிலை நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கக்கூடாது.

எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. என் ஆன்மா எப்போதும் விரும்பிய அனைத்தும் நீங்கள்தான். நம்மில் இருவர் முதல் நம்மில் நான்கு பேர் வரை.

இதைவிட அதிகமாகக் கேட்டிருக்க முடியாது, காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டினீர்கள்! இனிய திருமண நாள். உன்னை நேசிக்கிறேன், எப்போதும் & என்றென்றும்.” என்று குறிபிட்டிருகிறார்.

What do you think?

இன்று நடிகர் ஷைன் டாம் சாக்கோ தந்தை ..யின் இறுதி சடங்கு

த்ரிஷாவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட ரசிகர்