பழனியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு சோதனை
பழனியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு சோதனை- ராஜா முகமது என்ற இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு.
பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது (40). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். ராஜா முகமது தடை செய்யப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்.
நெய்க்காரப்பட்டியில் உள்ள ராஜா முகமது பின் வீட்டின் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை போலீசார் செல்போன் மடிக்கணினி உள்ளிட்டவைகளை அப்போது எடுத்துச் சென்றிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பழனிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீசார் ராஜா முகமது விடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பழனி நகர காவல் நிலையத்துக்கு ராஜா முகமதுவை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை செய்வதற்காக ராஜா முகமதுவை காரில் ஏற்றி கோவை அழைத்துச் சென்றுள்ளனர். பழனியைச் சேர்ந்த இளைஞரை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.