in

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி பேரணி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி பேரணி

 

செஞ்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி பேரணி …

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சார்பாக 79 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து காந்தி பஜார் வழியாக, பேருந்து நிலையம் மற்றும் விழுப்புரம் சாலை வழியாக சென்று பெரிய தெரு அங்காளம்மன் கோவில்.அருகில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தலைவர் தாராசிங் ( எ) சிவகுமார் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜி. அன்பழகன், முன்னாள் மாவட்ட தலைவர் எம். எஸ். ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் என். ஏ. ஏழுமலை, இந்து முன்னணி மு.மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஆர். எஸ். சரவணன்,ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவகாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் தங்கராமு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சிவப்பிரகாசம், சிவாஜி மற்றும் சந்திரசேகர், முருகன், மஸ்கட் வெங்கடேசன், ஜெகநாதன், பொன்பத்தி ராஜேந்திரன், மோகன், ரஞ்சித் குமார்,அஜித் குமார், சதீஷ், வீரபத்திரன், சத்தியமங்கலம் பாபு, முருகையன், சுரேஷ், காளி புஷ்பராஜ், சதீஷ்குமார், சங்கர், ராஜி, சுரேஷ், காளி ஆகியோர் கலந்து கொண்டு பாரத் மாதாஜி ஜே!வந்தே மாதரம் வந்தே மாதரம் என கோஷங்கள் எழுப்பி சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

What do you think?

செஞ்சி அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா

ரூபாய் 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டியும் பலனில்லை