ஆயிரம் திருக்கோவிலுக்கு உழவாரப்பணி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பினர் திட்டம்
ஆயிரம் நாட்களில் ஆயிரம் கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினர் தஞ்சை மாவட்டம் முழுவதும் புணரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆயிரம் திருக்கோவிலுக்கு உழவாரப்பணி மேற்கொள்ள தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பினர் திட்டமிட்டு
பெரிய கோவிலுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள, தஞ்சை கரந்தை சித்தி விநாயகர் கோவிலில் உழவாரப் பணிகளை செய்து வருகின்றனர்.
ஆயிரம் நாட்களில் ஆயிரம் கோவில்களில் உழவாரப்பணி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வரும் இவர்கள்
சிதிலம் அடைந்துள்ள கோயில்கள் பராமரிப்பு இல்லாத கோவில்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்டு, ஒரு கோவிலுக்கு 50 பேர் என ஒரு நாளைக்கு நான்கு கோவில்களில் 200 பேர் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

சிவ தொண்டர்கள் சமூக ஆர்வலர்கள் இப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முன் வரலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.


