in

நெல்லையில் நாராயணீய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

நெல்லையில் நாராயணீய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

 

நெல்லையில் நாராயணீய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்பு

நாராயணீயம் என்பது நாராயண பட்டதிரி குருவாயூரப்பன் முன்னால் மண்டபத்தில் உட்கார்ந்து குருவாயூரப்பனை ஸ்துதித்து 100 தசகங்களாக 1036 ஸ்லோகங்கள் இயற்றிய திவ்ய காவ்யம்  நாராயண பட்டதிரியும் குருவாயூரப்பனும் நேரில் பேசி கொண்டு இயற்றிய காவியமிது.

ஒவ்வொரு ஸ்லோகம் இயற்றி பாடி, குருவாயூரப்பா ! இது உண்மையா ? என்று பட்டதிரி கேட்க , ஆம் என்று குருவாயூரப்பன் தலை ஆட்டினால் பிறகே அடுத்த ஸ்லோகம் இயற்றுவாராம்.

சிறப்புகள் வாய்ந்த நாராயணீயம் கார்த்திகை 28 ( மலையாளம் விருச்சிகம் 28) கொல்ல வருஷம் 768 இதே நாளில் தான் மேல்பத்தூர் நாராயண பட்டதிரி நாராயணீயம் முடித்து குருவாயூரப்பன் திருப்பாதங்களில் சமர்ப்பித்தார்.

இந்த நாளை நாராயணீய தினம் என உலகெங்கும் கொண்டாடுகின்றனா். அதை நினைவு கூறும் விதமாக நெல்லை வண்ணாரப்பேட்டை அபீதாகுஜாம்பாள் மண்டலியினா் நாராயணீயம் பாராயணம் சிறப்புற நடத்தினா்.

மேலும் பெண்கள் அனைவரும் சீா் சுமந்து வந்து கிருஷ்ணன் ராதாகல்யாணம் சிறப்பாக நடத்தினா். வந்திருந்த பக்தா்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

What do you think?

நவ திருப்பதிகளில் இரட்டை திருப்பதி திருக்கோவிலில் காா்த்திகை பிரம்மோற்சவ கொடியேற்றம்

அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம்