நாங்குநோி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் சித்திரை சைத்ர பிரம்மோஸ்தவம் கொடியேற்றம்
நாங்குநோி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் சித்திரை சைத்ர பிரம்மோஸ்தவம் கொடியேற்றத்துடன்( த்வஜாரோகணம் ) ஆரம்பமாயிற்று. திரளான பக்தா்கள் தாிசனம்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், ஸ்வயம்வக்த சேஷத்திரங்களில் ஓன்றாகவும் அமைந்துள்ள திருவரமங்கை என்னும் வானமாமலை நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுவாமி நம்மாழ்வாரால் 11 பாக்களில் பாடல் பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. இங்கு பெருமாளுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை நாழிக்கிணற்றில் சோ்த்து வருகின்றனர்.
இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத் திருத்தலத்தில் ஆண்டு முமுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது.
மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் சித்திரை பிரம்மோற்ச்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக நேற்று காலை ம்ருத்ஸங்ரஹணம் அங்குர்ரார்ப்பணம் மாலையில் சேனை முதல்வா் வீதி புறப்பாடு நடைபெற்றது.பிரம்மோத்ஸவ தொடக்க நாளான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து கொடிப்பட்டமானது சக்கரத்தாழ்வார் சேனைமுதல்வர் ஆகியோரோடு பல்லக்கில் எடுத்து வரப்பட்டு மாடவீதிகளில் வலம் வந்தது. ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் கொடி மர மண்டபத்தில் அமைந்துள்ள விமானகலசபீடத்தில் ஏழுந்தருள கும்ப பூஜைகள் நடைபெற்றது.
பகவத்பிராத்தயுடன் ஜீயர் சுவாமிகள் அனுக்கிரஹத்துடன் காலை 09.30 மணிக்கு மேல் 10.15 க்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடி மரத்திற்கு தா்ப்பபைபுல் கட்டி புதுவஸ்திரம் மலா்மாலைகள்அணிவித்து கலசஅபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
வானமாமலை ஜீயா் சுவாமிக்கு மாியாதை செய்யப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றிலிருந்து 11 தினங்கள் தினமும் மாலையில் சுவாமி,தயாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
5ம் திருநாள் கருடசேவையும், 7ம் திருநாள் தங்க பல்லக்கும், கண்ணாடி சப்பரமும், 10 ம் திருநாள் திருத்தேரும் சிறப்பாகும். விழா ஏற்பாடுகளை நாங்குனோி ஸ்ரீவானமாமலை ஜீயா் மடம் ஏற்பாடு செய்திருந்தனா்.