in

நாமக்கல் பெரிய காண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

நாமக்கல் பெரிய காண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

 

நாமக்கல் அருகே மோகனூரில் பெரிய காண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மோகனூர் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முப்பூசை முருகன், ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ கரும்பாயி அம்மன், ஸ்ரீதங்காயி அம்மன், ஸ்ரீ பொன்னர் சங்கர் சுவாமி, மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ காத்தவராய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை மிக விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று இரவு கணபதி வழிபாட்டுடன் முதல் கால யாகசாலை பூஜை நிறைவுற்று இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெற்றது 2-ம் கால யாகசாலை பூஜைமுடிந்ததும் சிவாச்சாரியார்கள் புனித கலசத்தை மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் அமைக்கப்பட்டுள்ள விமான கலசத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் புனித நீரை சிவாச்சாரியார்கள் புனித கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக பெருவிழாவை மிக விமர்சையாக நடத்தினர் அப்போது விமான கலசத்திற்கு சந்தனம் மாவிலை வைத்து மகா தீபாரத்தை காண்பிக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

பின்னர் மூலவர் பெரியகாண்டி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

What do you think?

27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி

மணிரத்னத்தின் ThugLife தீப்பொறியா? சறுகளா? ThugLife Movie Review