in

நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பில் பக்தர்களுக்கு காட்சி

நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பில் பக்தர்களுக்கு காட்சி

 

கார்த்திகை மாத அமாவாசை தினம் நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பில் பக்தர்களுக்கு காட்சி நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.

உலக பிரசித்தி பெற்றநாமக்கல் மாநகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாளித்து வருகிறார்.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குளிர் காலமான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று இரவு இவ்வாண்டில் முதல் முறையாக ஆஞ்சநேயர் சுவாமிக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய்யை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

வெண்ணை அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர் சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

What do you think?

தளபதி முதல்வரா வரட்டும், ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போம்!

வேலூர் பச்சை மலை முருகன் ஆலயத்தில் 108 சங்க அபிஷேகம்