அழகான வில்லனாக நடித்துள்ளேன் நாகர்ஜுனா
ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஆடியோ லாஞ்ச சனிக்கிழமை சென்னையில் பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு ..டன் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் மற்றும்பட குழுவினர் கலந்து கொண்டனர்.
சோபிதா துலிபாலா கூலி படத்தின் தெலுங்கு டிரெய்லரைப் பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் மாமனார் நாகராஜுனாவைப் பாராட்டி,. “செம்ம மாஸ் என்று பகிர்ந்துள்ளார்.
கூலி படத்தில் சைமன் என்ற வில்லனாக நாகார்ஜுனா நடிக்கிறார்.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், நாகார்ஜுனா, “நான் மிகவும் அழகான வில்லனாக நடித்துள்ளேன் என்று எல்லோரும் சொன்னார்கள். லோகேஷ் என்னை அப்படித்தான் காட்டியுள்ளார்.
கூலி 100 பாட்ஷா...விற்கு சமம்.
எனக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைத்தது. நான் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் உறுதியாக இருந்தார்.
நான் இப்படி நடித்தால் மக்கள் என்னை ஏற்றுகொள்வார்களா? என்னை கெட்டவன் என்று சொல்ல மாட்டார்களா? என்று ஓவ்வொரு ஷாட்..டிலும் கேட்பேன் என்று கூறியிருந்தார்.
நாகார்ஜுனா ஒரு முழு குடும்பத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ரஜினிகாந்த் வயதான கடத்தல்காரர் தேவாவாக நடிக்கிறார், அவர் தனது பழைய கும்பலை மீண்டும் ஒன்றிணைத்து தனது ஆட்டத்தை ஆரம்பிக்க திட்டத்தை வகுக்கிறார்.
உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர் மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
கூலி ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கூலி Trailer வெளியாகி 24 மணி நேரத்தில் Jailer.. ரை விட 4 million… Views அதிகமாக பெற்றிருகிறது.


