in

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்

 

நத்தத்தில் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது – அரசு பேருந்தில் இருந்து முதல்வர் படத்தை அகற்றியதால் பரபரப்பு.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவது போன்று பேருந்துகளில் மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதி இயக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மண்டல செயலாளர் அண்ணாதுரை, நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அழகம்மாள் ஆகியோர் தலைமையில் 232-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர்.

பின்னர் அவர்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஓட்டி திமுக, அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் அரசு பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை அகற்றியதால் பரபரப்பாக காணப்பட்டது.மேலும் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையறிந்த நத்தம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 32 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

What do you think?

எல்லா தடைகளும் நீங்கிடுச்சு.. ஜனவரி 14-ஆம் தேதி படம் ரிலீஸ்

பராசக்தி படத்தைப் பார்த்துட்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு