இயக்குனர் ராஜ் நிதிமோருவின் மனைவியின் மர்மமான போஸ்ட்
சமந்தா சென்ற வாரம் இயக்குனர் ராஜ் நிதிமோருவின் தோளில் சாய்ந்திருப்பது போல் இன்ஸ்டால்வில் போஸ்ட் செய்த புகைப்படத்தால் சிட்டாடல் இயக்குனர் ராஜ் நிதிமோருவை காதலிப்பதாக வதந்தி பரவி வருகிறது.
சமந்தாவின் மேனேஜர் இதில் உண்மைஇல்லை என்று விளக்கம் அளித்தார் ஆனால் தற்பொழுது ராஜ் நிதிமோருவின் மனைவி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இது இணையத்தில் ஊகங்களைத் மேலும் தூண்டியது. அதில் “ நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் செய்த தீய செயல்களுக்கு கர்மா உங்களை பின் தொடரும் அது உங்களை தேடி வந்து தண்டிக்கும் அதுபோல் நீங்கள் செய்த நல்ல செயல்களும் உங்களை தேடி வந்து ஆசீர்வதிக்கும் உங்கள் மனம் மலரட்டும், என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைக் கேட்கும், , என்னைப் பற்றிப் பேசும், இன்று என்னைச் சந்திக்கும் அனைவருக்கும் நான் ஆசீர்வாதங்களையும் அன்பையும் அனுப்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் இவர் யாரை குறிப்பிட்டு இருக்கிறார் என்று கூறவில்லை ஆனாலும் இவர் சமந்தா ராஜ் நிதிமோருவின் Dating குறித்து தான் இப்படி போஸ்ட் செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து சொல்ல இதிற்கான பதில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ் மற்றும் சமந்தாவின் காதல் வதந்திகள் ராஜின் திருமண வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கின. ஆனால் அவர் ஷ்யாமாலியை (Shyamali) பிரிந்துவிட்டாரா என்ற உறுதியான தகவலும் இல்லை.


