செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைத்த மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலயம் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஆலயத்தின் கருவறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம், நகை, உள்ளிட்டவைகள் கணக்கீடு பண்ணாமல் இருந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து செஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருகை தரும் கோயிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


