in

உப்பூரில் மர்ம நோய் தாக்குதல்: ஏக்கர் கணக்கில் கருகிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை

உப்பூரில் மர்ம நோய் தாக்குதல்: ஏக்கர் கணக்கில் கருகிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில், பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மர்ம நோய் தாக்குதலால் கருகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இருந்ததால், உப்பூர் பகுதி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் நெல் சாகுபடி மேற்கொண்டனர். பயிர்கள் நன்கு வளர்ந்து, கதிர் விட்டு அறுவடைக்குத் தயாரான நிலையில், திடீரென புதுவிதமான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

“நல்ல மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு சில நாட்களில் பயிர்கள் அனைத்தும் தீயால் கருகியது போல் மாறிவிட்டன. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வளர்த்த பயிர்கள் இப்போது கால்நடைகளுக்குக் கூட தீவனமாகப் பயன்படாத நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்த பாதிப்பால் ஒரு படி நெல் கூட தேறாது” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறை அதிகாரிகளும் உடனடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குச் சென்று, இந்த நோய் தாக்குதல் எதனால் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், பாதிக்கப்பட்ட மற்ற விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

What do you think?

பாலியல் குற்றச்சாட்டுல சிக்கியிருக்காரு நதீம் கான்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்