காதணி விழாவிற்கு 51 வகையான சீர் செய்த தாய்மாமன்.
பரமக்குடி, ஜூன் 22, பண மாலை, சண்டைக்கு கிடாய் என 51 வகையான சீர்தட்டுகளுடன் சீர் செய்த தாய் மாமன்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் முத்துலட்சுமி தம்பதியின் மகள் யாழினிஸ்ரீக்கு இன்று காதணி விழா நடைபெற்றது.
அப்போது தாய் மாமன்கள் சார்பில் சிறுமிக்கு 50 ரூபாய் பணமாலை, சண்டை கிடா உள்ளிட்டவை சீர் வரிசையாக வழங்கப்பட்டது. பண மாலை, சண்டை கிடா ஆகியவை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதேபோல் 51 வகையான சீர்வரிசைகள் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் சார்பில் பணமாலை, சண்டை கிடா உள்ளிட்ட 51 வகையான சீர்வரிசைகள் லாரியில் கொண்டுவரப்பட்டது. பொதுமக்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.


