in

முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் ஆலய நான்காம் ஆண்டு 1008 இளநீர் அபிஷேகம்

முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் ஆலய நான்காம் ஆண்டு 1008 இளநீர் அபிஷேகம்

 

முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் ஆலய நான்காம் ஆண்டு 1008 இளநீர் அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடாவல்லீஸ்வரர் ஆலய அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு நான்காம் ஆண்டு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகப் பிரியரான அம்பிகை பாகனுக்குக் குறிப்பிட்ட சில திரவியங்களால் அபிஷேகம் செய்தால் அவா் திருவுள்ளம் மகிழ்ந்து நாம் கேட்ட வரங்களை யெல்லாம் கேட்டவாறு தந்தருள்வாா்.

சிவந்த திருமேனி கொண்ட ஈசனை சித்திரை −வைகாசி மாதத் தில் வரும் அக்னி நட்சத்திரத்தின் போதோ அல்லது அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி நாளிலோ இளநீா் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது அளவிடமுடியாத புண்ணிய பலன்களை அளிக்கும் கைங்கா்யமாகும் ஆதலால் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் மற்றும் 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

 

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட் ஸ்ரீ ஆடாவல்லீஸ்வரர் பெருமானுக்கு பஞ்சமுகத்தி ஆராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை முன்னூர் சிவஸ்ரீ சரவண குருக்கள் செய்து இருந்தார்.

What do you think?

தமிழக துணை முதல்வர் உதயநிதி யா.? அல்லது உயாநிதியா.? குழப்பத்தில் மதுரை திமுகவினர்

ஸ்ரீ கங்கை அம்மன் 28-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா திருக்கல்யாணம்