in

காவல்துறையை கண்டித்து வணிகர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவல்துறையை கண்டித்து வணிகர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருட்டு நகைகளை நகை கடை வியாபாரிகள் வாங்குவதாக கூறி காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும்,

வழக்கு என்ற பெயரில் நகை வியாபாரிகளை தரக்குறைவாக நடத்துவதை கண்டித்தும்,

விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் விசாரணை செய்யாமல்,

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வணிகர் வைத்து விசாரணை செய்வதை கண்டித்தும், இதேபோல் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பெரம்பலூர் காவல் ஆய்வாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும்,

நகை கடை உரிமையாளர்களை குற்றவாளி போல் நடத்தும் காவல்துறையினரை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நகை வியாபாரிகள் – வணிகர்கள் மற்றும் நகை அடகு பிடிப்போர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

 ஆஷாட நவராத்திரி விழா 7 ஆம் நாள் நவதானியம் அலங்காரம்