அருள்மிகு காசி விஸ்வநாதர் திருவிளக்கு பூஜையில் 1000 க்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு
தென்காசி மாவட்டம் தென்காசி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமும் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் உள்ள அருள்தரும் உலக அம்மன் கோவில் வளாகத்தில்
தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக அமைதிக்கும் , மழை பெய்து விவசாயம் செழித்திடவும், 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுத வேண்டியும் உலகம்மன் சன்னதியில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் செய்திருந்தனர் .


