in

காலை உணவு விரிவாக்க திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்

காலை உணவு விரிவாக்க திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்

 

தமிழக முதல்வர் துவக்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டத்தை குத்தாலம் அரசு பள்ளிகளில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.அதை மேலும் பல பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அத்திட்டத்தை குத்தாலம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்.

அவருடன் பேருராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் அரசு அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

What do you think?

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

விநாயகர் சதுர்த்தி விழா – மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை