in

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே. என்.நேரு சாமி தரிசனம்.

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே. என்.நேரு சாமி தரிசனம்.

 

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே. என்.நேரு சாமி தரிசனம். பொதுமக்களுடன் குழு படம் எடுத்துக் கொண்ட அமைச்சர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை புரிந்தார்.

தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருநிலை நாயகி அம்பாள், சட்டநாதர் சுவாமி, அஷ்ட பைரவர்கள் ஆகிய சுவாமி சன்னதிகளில் அமைச்சர் கே.என்.நேரு சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதனிடையே அமைச்சர் சுவாமி தரிசனம் செய்வது குறித்து அறிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் நேரு உடன் குழு புகைப்படம் எடுத்து சென்றனர்.

What do you think?

கும்பகோணம் பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா

மயிலாடுதுறை பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பதுங்கி இருந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர்.