சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூவலூர் அய்யனார் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூவலூர் அய்யனார் ஆலயத்தில் பால்குட ஊர்வலம், மற்றும் ஆரோக்கியநாதபுரம் பிரித்தியங்கரா தேவி ஆலயத்தில் 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி மூவலூரில் பிரசித்தி பெற்ற அய்யனார் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
காவிரி ஆற்றங்கரையிலிருந்து துவங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது அப்பொழுது பொதுமக்கள் வீடுகள் தோறும் வழிபாடு செய்தனர்.
இதேபோல் தூக்கணாங்குளம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.