மாற்றுதிறன் குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் மதிப்பீட்டு முகாம்
ஜீரோ முதல் 18 வயது வரை மாற்றுதிறன் குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் மதிப்பீட்டு முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் இணைந்து நடத்தும் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுதிறன் குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் திருஞானசம்பந்தம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முகாமை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, பெற்றோர்கள் மாற்றுதிறன் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆர்ட்ஸ், பெயின்டிப் போன்ற வற்றில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சித்ரா நன்றி தெரிவித்தார்.முகாமில் 100க்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


