மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி மாத கிருத்திகை கஜ வாகனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி கஜ வாகனத்தில் முருகர் வள்ளி தெய்வானை உடன் மலையை வலம் வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் ரம்யமாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன. உட்பிரகாரம் வந்து வெள்ளித்தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மலை மேல் வெள்ளி தேர்ரில் வலம் வந்து அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


