மஞ்சு வாரியரின் உயிரை ‘காப்பாற்றிய’ மனோஜ் கே ஜெயன்
15 வருட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்குத் திரும்பிய மஞ்சு வாரியர் அவரது கேரியரில் எதிர்பார்த்தபடி உயரவில்லை என்றாலும், மஞ்சு வாரியர் இன்று வரை அவரது பிரமிக்க வைக்கும் நடிப்புகள் மலையாளிகளின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்.
இயக்குனர் மோகனின் சாக்ஷ்யம் (1995) திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானாலும். ஏ.கே. லோஹிதாதாஸ் இயக்கத்தில் சுந்தர் தாஸின் சல்லபம் (1996) தான் அவரை உண்மையிலேயே ஒரு நடிகையாக நிலைநிறுத்தியது.
சல்லாபம் படத்தில் மஞ்சுவுடன் முக்கிய வேடத்தில் நடித்தார் நடிகர் மனோஜ் கே ஜெயன், அப்படத்தின் படபிடிப்பில் நடந்த விஷயத்தை அண்மையில் பகிந்து கொண்டார்.
அந்தக் காட்சியில் மஞ்சுவின் கதாபாத்திரம், காதல் தோல்வியால் வேகமாக வரும் ரயிலின் முன் குதித்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள தண்டவாளத்தை நோக்கி செல்வார், மஞ்சு டயலாக் பேசி கொண்டே எதிரே வரும் Train..னை கவனிக்காமல் வேசமாக தண்டவாளத்தில் நடந்து சென்றார், Train … அவர் அருகில் வரவும் நான் அவர் கையை பிடித்து இழுக்கவும் சரியாக இருந்தது, நான் மட்டும் இழுக்க வில்லை’ என்றால் மஞ்சு சக்கரங்களுக்கு அடியில் சென்றிருப்பார்.
அந்த அளவற்கு தன்னை மறந்து கதாபத்திரமாகவே மாறிவிட்டார். ஷாட் இறுதியாக பதிவு செய்யப்பட்டபோது முழு யூனிட்டும் கைதட்டல்களை எழுப்பிய போது தான் உணர்விற்கு வந்தார் மஞ்சு என்று மனோஜ் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்..


