பொத்தனூர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்
நாமக்கல் அருகே பொத்தனூர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா – திருவாசகம் முற்றோதல்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பொத்தனூரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்றுசிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக திருவாசகம் முற்றோதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை விநாயகர், முருகர், சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரை மேடையின் மேல் எழுந்தருள் செய்து 21வகை வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் எனும் ஞான வேள்வி நடைபெற்றது காலை 9 மணிக்கு தொடங்கிய திருவாசகம் முற்றேதால் ஆனது மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
காலை முதல் மாலை வரை விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதில் சுற்று பகுதியைச் சார்ந்த திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதலில் கலந்து கொண்டனர்.