மந்தகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா பெண்கள் முளைப்பாலி எடுத்து நேர்த்திக்கடன்
சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா பெண்கள் முளைப்பாலி எடுத்து நேர்த்திக்கடன்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்த கோயிலின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காவேரி குளக்கரை இருந்து கரகம் எடுத்துவரப்பட்டது.
அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாலியை பக்தர்கள் கோயிலுக்கு எடுத்துவந்து வைத்தனர்.

கோயிலிலிருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 200க்கும் மேற்பட்ட ஆண் , பெண் முளைப்பாலியை எடுத்துக் கொண்டு திருநகரி ஆற்றில் கரைக்கு சென்றனர்.
அங்கு பூஜைகள் முடிவடைந்த பின்னர் பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாலிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.


