மம்மூட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட் ரிலீஸ் தேதி கன்பார்ம்! மெகா அப்டேட்!
மலையாள திரையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்களான மம்மூட்டியும், மோகன்லாலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ரியாட்’ (Patriot).
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முக்கிய தகவல்கள் இதோ:பிரபல இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்கியுள்ளார்.
மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் இணைந்து ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, குஞ்சக்கோ போபன் என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026, ஏப்ரல் 23-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை விருந்தாக இந்தப் படம் அமையப்போகிறது.


