in

நூதனமாக போராட்டம் செய்த மலையாள நடிகர்கள்


Watch – YouTube Click

நூதனமாக போராட்டம் செய்த மலையாள நடிகர்கள்

மலையாள நடிகர் சுரேஷ் கோபி நீண்ட நாட்களுக்கு பிறகு ஜானகி வெர்சஸ்(vs) ஸ்டேட் ஆப் கேரளா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் டைட்டில்..இல் இடம் பெற்றுள்ள ஜானகி என்ற பெயரை மாற்றும்படி சென்சார் போர்ட் கூற  டைட்டில்..லை மற்ற மறுத்ததால் சென்சார் போர்ட் Certificate கொடுக்கவில்லை.

இதனை எதிர்த்து படக் குழுவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். புராணத்தின் அடிப்படையில் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் அதற்கு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்று நீதிமன்றம் அறிவுரை கூறிய போதிலும் சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்க மறுத்ததை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள சென்சார் அலுவலகம் முன்பாக நேற்று மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சுதந்திரத்தை கத்தரிக்க கூடாது என்று ஆவேசமாக குரல் எழுப்பி தங்கள் கையில் கொண்டு வந்த கத்தரிக்கோல்களை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு நூதனமாக போராட்டம் செய்தனர்.

What do you think?

மகாநதி சீரியலில் இனி யமுனாக இவர்தான்

லோகேஷ் … நடிக்கும்… வன்முறை மட்டும் தான்