in

மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் பங்குனி உத்திர விழா 

மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் பங்குனி உத்திர விழா 

தங்கமயில் வாகனம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தங்கமயில் வாகன உற்சவம் நடைபெற்றது.

மேலும் மயிலத்தில் பங்குனி உத்திர விழாவில் தங்கமயில் வாகனத்தில் வரும் முருகனைத் தரிசிப்பதன் மூலம், திருமணத் தடை நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், வாழ்வில் வெற்றியும், ஞானமும் கிடைக்கும் பக்தர்களின் நம்பிக்கை. முன்னதாக ஸ்ரீ விநாயகர் மற்றும் வீரபாகு வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து உற்சவமூர்த்திகள் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு மகாதிபாரதனை கும்பதீபம் நட்சத்திர தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம், மற்றும் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகின்ற 31 ஆம் தேதி காலை 5.45 மணியளவில் நடைபெற உள்ளது

What do you think?

அதிமுகவில் கிளர்ச்சி: வேட்பாளர் மாற்றம் கோரி நிர்வாகிகள் ராஜினாமா எச்சரிக்கை.

Campa Energy Drink விளம்பர வீடியோ!அஜித்தை கலாய்க்கும் ரசிகர்கள்!விளம்பரத்தை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்.