மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் தமிழக பிஜேபி தலைவர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சாமி தரிசனம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் தமிழக பிஜேபி தலைவர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சாமி தரிசனம்…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு இன்று மாலை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் முக்கிய இடமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மகாராஷ்டிரா மாநில கவர்னர்மான சிபி ராதாகிருஷ்ணன் வருகை புரிந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே ஆண்டாள் கோவில் வளாகத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரை வரவேற்று திருக்கோவிலுக்குள் இருவரும் ஒன்றாக சென்றனர்.
தொடர்ந்து திருக்கோவில் சார்பில் ஆளுநருக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர் பிரதான வாயில் வழியாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னாரை தரிசனம் செய்தார்.அவருடன் வந்த நயினார் நாகேந்திரன் திருக்கோவில் சிறப்பு பற்றி ஆளுநருக்கு விளக்கினார்.
தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் மாலை சூடி அழகு பார்த்த கிணற்றை தரிசனம் செய்த ஆளுநர் திருக்கோவில் பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்திற்கு சென்றார். அங்கு சட கோப ராமானுஜர் ஜியரை வணங்கி ஆசி பெற்ற அவர் மணவாள மாமுனிகள் சன்னதியில் தரிசனம் செய்தார்.
தொடர்ந்துஸ்ரீ ஆண்டாள் நந்தவனம் சென்று அவர் செய்துவிட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
மதுரைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் செல்வதற்காக தனது வாகனத்தில் ஏறி அமர்ந்த போது அவருடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் ஏறி அமர்ந்து கொண்டு இருவரும் ஒரே காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயணம் செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் தான் அதிமுக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகம் நடைபெற அதிகாரிகளை விட பெற்றோர்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார். மத்திய அரசு கல்விக்காக 2500 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்காமல் உள்ளதால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி உள்ள தொடர்பான கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்லி நழுவி விட்டார்.