in

பாபநாசம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமியையொட்டி மகாலட்சுமி ஹோமம்

பாபநாசம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமியையொட்டி மகாலட்சுமி ஹோமம்

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமியையொட்டி மகாலட்சுமி ஹோமம்….

திரளான பக்தர்கள் பங்கேற்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ பங்கஜவள்ளித்தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்( பூமி தேவி, ஸ்ரீதேவி சமேத பாபவிமோசன பெருமாள்), கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை யொட்டி மகா சுதர்சன மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

இந்த ஹோமத்தை கோயில் செயல் அலுவலர் ஆர். விக்னேஷ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஹோமத்தில் பட்டாச்சாரியர்கள் மங்கல பொருள்களால் சிறப்பு ஹோமம் நடத்தி மகா பூர்ணாஹூதி செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த மகா சுதர்சன மகாலட்சுமி ஹோமத்தில் கலந்து கொள்வதால் மாகாமிருத்துஞ்சய ஜெயம் என்னும் மரண பயம் விலகும், ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யா விருத்தி, சந்தான பாக்கியம் உண்டாகும், கடன் நிவர்த்தி ஏற்படும், மகா சதர்சன மகாலட்சுமி ஹோமத்தில் கலந்து கொள்வதால் சுமங்கலி பாக்கியம் உள்ளிட்டவை உண்டாகும் என நம்பப்படுகிறது.

ஹோமத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் மற்றும் அறங்காவலர் குழுவினர் சதீஷ், சீதாலட்சுமி பாபநாசம் இறைபணி மன்ற தலைவர் ஜி.குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது ஜெயந்தி விழா

ஒரே நேரத்தில் 7 திருக்கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்