மகாபாரத பிரசங்க அக்னிவசந்த திருவிழா
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் மகாபாரத பிரசங்க அக்னிவசந்த திருவிழாவில் திரெளபதி அம்மனுக்கு திருமண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா மற்றும் கிராம தேவதை திருத்தேர் உற்சவ விழா கடந்த மே 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பகல் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் மகாபாரத பிரசங்க நிகழ்ச்சியும்,
இதைத் தொடர்ந்து செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வான வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வரும் நிலையில்.
இன்று காலை ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து திரெளபதி அம்மனின் தாய் வீடான அஞ்சாஞ்சேரி கிராமமான தாய் வீட்டில் இருந்து திருமண சீர்வரிசியுடன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
கோவிலில் உற்சவர் கிருஷ்ணன், அர்ஜுனன், திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து திருமண வைபவம் நிகழ்ச்சியில் மந்திரங்கள் முழங்க திரௌபதி அம்மனுக்கு திரு கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் பொன்பத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்தனர்.


