in

செஞ்சி ஸ்ரீசிவசக்திவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

செஞ்சி ஸ்ரீசிவசக்திவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

 

செஞ்சி ஸ்ரீசிவசக்திவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சிறுகடம்பூர் பகுதி அருள்மிகு ஸ்ரீசிவசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு 4ம் தேதி விநாயகர் வழிபாடு, கலச பிரதிஷ்டை, முதல் கால வேள்வியும், இன்று காலை திருப்பள்ளி எழுச்சியும், கோபூஜை, மகாசங்கல்பமும், இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்று பூர்ணாகதி செலுத்தி மேளதாளம் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் 10.30 மணிக்கு கோவிலின் கோபுரத்தில் அமைந்துள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவர் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும் நடைபெற்றது.கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அப்போது செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என பக்தி கோசங்கள் முழங்க வணங்கினர்.

கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்கினர்…

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சி சிறுகடம்பூர் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

What do you think?

ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் 194ம் ஆண்டு தேர் திருவிழா

400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்