in

ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு மகா தீபாரதனை பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி

ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு மகா தீபாரதனை பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி உடனுறை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை ஐந்தாவது ஐந்தாம் சோமவாரத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களால் மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

 

மேலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மூலவர்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு மகா தீபாரதனை பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

2.77 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

‘அகாண்டா 2’ படத்தை நம்ம பிரதமர் மோடி பார்க்கப் போறாராம்