மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா சேஷ வாகனம்
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்விற்காக சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபம் நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8;ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்களர் முன்பாக பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் இரவு வரை அண்ணாநகர் , யாகப்பாநகர், சௌராஷ்ட்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி இரவு வண்டியூர் பகுதியில் உள்ள வீர ராகவபெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.
இதனையடுத்து இன்று காலை கள்ளழகருக்கு திருமஞ்சணம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடைபெற்று ஏகாந்த சேவையில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் வைகை ஆற்றின் மையத்தில் தேனூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேனூர் மண்டகபடி நோக்கி புறப்பட்டாகினார்.
அப்போது வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி சுந்தராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..
இதனை தொடர்ந்து இன்று மாலை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.