in

கஜினி, துப்பாக்கி பட பாணியில் உருவாகிய மதராசி

கஜினி, துப்பாக்கி பட பாணியில் உருவாகிய மதராசி


Watch – YouTube Click

ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் அவர் சல்மான்கான் வைத்து இயக்கிய சிக்கந்தர் படு தோல்வி அடைந்த நிலையில் இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அதிகம் நம்பி இருக்கிறார்.

இப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று கூறும் அவர், இந்த படத்தில் கஜினி படத்தில் வரும் சூர்யாவை போலவும் துப்பாக்கி படத்தில் வரும் விஜய்யை போலவும் இரண்டு பாணியில் மதராசி திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன்.

இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் மேலும் மதராசி என்ற வார்த்தையை வட இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களை அவர்கள் மதராசி என்றுதான் சொல்கிறார்கள்.

சில பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஹீரோ..வுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார் என்பதே மதராசி.

நான் இயக்கிய தீனா, ரமணா, கஜினி, வரிசையில் மதராசி நிச்சயம் இடம்பெறும் என்கிறார் செப்டம்பர் ஐந்தாம் தேதி மாதராசி திரைக்கு வருகிறது.

What do you think?

நடிகர்களுக்கு மட்டும் சலுகை கொடுக்கின்றனர் ராதிகா மதன் வருத்தம்

joy கிரிஸ்டல்டா ..வை இரண்டாம்  திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்