in

கார்த்திகை மாத முதல் சோமவாரம் தினத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம்

கார்த்திகை மாத முதல் சோமவாரம் தினத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம்

 

கார்த்திகை மாத முதல் சோமவாரம் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரகாரம் சுற்றி 108 முறை வலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜர் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.

அங்கு வந்த பக்தர்கள் நடராஜர் சன்னதியை வில்வம், பூக்கள், கையில் வைத்துக்கொண்டு கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 108 முறை சுற்றி வலம் வந்தனர்.

பின்னர் சிவகாமசுந்தரி சுவாமி மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் புண்டரிக வள்ளி தாயார் சன்னதிகளில் வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் பக்தர்களின் வருகையால் நடராஜர் கோவில் முழுமையாக நிரம்பி காணப்பட்டது.

What do you think?

கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் கோவில்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கீர்த்தி ஷெட்டி நியூ லுக்! மாஸ் காட்டும் கீர்த்தி ஷெட்டி