in

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி உற்சவம் திருக்கல்யாணம்

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி உற்சவம் திருக்கல்யாணம்

 

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு வைகாசி மாத தீமிதி உற்சவம் கடந்த 12ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று ஆலயத்தில் நடைபெற்றது, இதனை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வர,வேதியர்கள் மந்திரம் ஓதி யாகம் வளர்த்தனர் தொடர்ந்து திருக்கல்யாணம் தொடர்பான சடங்குகள் நடைபெற்றன.

மாலை மாற்றும் வைபவம் உள்ளிட்ட சடங்குகளுக்கு பின்னர் மாங்கல்ய தாரணம் எனப்படும் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

What do you think?

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழா திருத்தேர் உற்சவம்

பிரமாண்ட விழாவை சொந்த ஊரில் நடத்தி அசத்திய தொழிலதிபர்