கூலி இன்று முதல் OTT..யில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தில் ரஜினிகாந்த் தவிர நாகார்ஜுனா அக்கினேனி, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், அமீர்கான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்..
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ஒளிப்பதிவு கிரீஷ் கங்காதரன். சென்னையில் ஒரு தங்கும் விடுதியை நடத்தி வரும் முன்னாள் கூலிப்படை வீரரான தேவா (ரஜினிகாந்த்) அவரது நெருங்கிய நண்பர் ராஜசேகர் கொலை செய்யப்பட்டவுடன் அவரது வாழ்க்கை மாறுகிறது.
உண்மையைக் கண்டறியத் தொடங்கும் தேவா, இந்தக் குற்றம் ஒரு கடத்தல்காரரான சைமன் மற்றும் அவரது கூட்டாளி தயாளுடன் தொடர்புடையது என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
தேடலின் போது, உறுப்பு கடத்தல் மோசடியைக் கண்டுபிடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, பெரிய திரையில் கூலி..யின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, OTT..யில் மக்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது கூலி செப்டம்பர் 11…அதாவது இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படும். மகிழ்ச்சியுடன் கண்டு களியுங்கள்.


