கிளியனூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி ஆலய பிரம்மோற்சவ விழா
கிளியனூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி ஆலய பிரம்மோற்சவ விழா – திருக்கல்யாணம்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிளியனூர் கிராமத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் அருள்திரு ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி ஆலய பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 09-052025 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மசுவிழா தொடங்கியது.
மேலும் அரக்கு மாளிகை உற்சவம், பக்காசூரனை சம்ஹாரம் செய்தல், ஆகிய நிகழ்வுகள் தினமும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான திரௌபதி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் இருந்து சீர்வரிசை தாம்பூல பொருட்கள் மற்றும் மங்கல பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டன.
மேலும் விநாயகர் பூஜைவுடன் இனிதே தொடங்கியது. மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் கால்நடும் வைபத்துடன் மற்றும் கலச பூஜை, காப்பு கட்டும் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆகிய இரு தெய்வங்களுக்கு மங்கள நாண் அணிவிக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுன மகாராஜா மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது.