in

நாமக்கல் பரமத்திவேலூர் அருகே கருப்பண்ண சுவாமி மண்டல பூஜை

நாமக்கல் பரமத்திவேலூர் அருகே கருப்பண்ண சுவாமி மண்டல பூஜை

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மறவா பாளையம், தெற்கு மேட்டில் உள்ள சிங்காரத்தோப்பு பெரிய கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு மண்டல அபிஷேகத்தினை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை.

விழாவின் நிகழ்வாக 22 அடி சிதை சிற்பத்தில் உள்ள பெரிய கருப்பண்ணசாமிக்கு தேங்காய் பழம் உடைத்து சுண்டல், சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு பெரிய கருப்பண்ணசாமிக்கு சாம்பிராணி மற்றும் உதிரிப்பூ அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சப்த கன்னிமார் சுவாமிகளுக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெரிய கருப்பண்ணசாமிக்கு பூக்களை சொறிந்தும் ஆலயத்தை சுற்றி வந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழாவின் நிறைவாக அனைவருக்கும் விபூதி குங்கும பிரசாதம் வழங்கி அன்னதானம் செய்தனர்.

What do you think?

பாபநாசத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலை