ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
அச்சரப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றதுமான, முக்கண் முனிவரால் பூஜிக்கப்பட்டதுமான அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இத்திருக்கோயிலில் கார்த்திகை மாத கிருத்தியையொட்டி விநாயகப் பெருமான், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், வள்ளி தெய்வானை உடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி களுக்கு காலை மகா அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
அதன் பின்னர்,மாலை 6:00 மணிக்கு கோயில் கோபுரங்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் வளாகத்தில் உற்சவமூர்த்திகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரமும், மேள, தாளங்கள் ஒலிக்க, தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளும் கோயிலின் உட்பிரகார வளாகத்தில் வலம் உ வந்தனர்.

சுவாமிகளுக்கு உரிய வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
கோயிலின் எதிரே சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மன், முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.


